ஈப்போ, 22 செப்டம்பர் (பெர்னாமா) - பயிற்சி பெற்ற தாதியர்களை நிரந்தரமாக நியமிப்பதன் வழியாக, நாடு முழுவதும் தற்போது இந்தப் பதவிகளுக்கான சுமார் 14,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு முதல் அப்பதவிகளுக்கான இடைக்கால ஒப்பந்த நியமனங்களுக்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள சுகாதார வளாகங்களில் பணியாளர்களை அதிகரிக்கும் சுகாதார அமைச்சின் முக்கிய முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இன்று, ஈப்போவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தீபகற்ப மண்டலத்திற்கான சுகாதார அமைச்சின் பயிற்சி கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் Dr Dzulkefly அவ்வாறு கூறினார்.
இந்நடவடிக்கை, உலக சுகாதார அமைப்பு, WHO நிர்ணயித்துள்ள மக்களுக்கான தாதியர் தொகை விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஒவ்வொரு 1,000 பேருக்கு, குறைந்தது ஆறு தாதிகள் இருக்க வேண்டும்.
தற்போது, ஒவ்வொரு 1,000 மலேசியர்களுக்கும் 3.8 தாதியர்கள் என்ற விகிதத்தை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)