Ad Banner
Ad Banner
 பொது

சபா மாநில தேர்தல்; இன்று வேட்புமனு தாக்கல்

15/11/2025 10:53 AM

சபா, 15 நவம்பர் (பெர்னாமா) --  17-வது சபா மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை இன்று காலை 9 மணிக்கு மாநிலம் முழுவதுமுள்ள 25 மையங்களில் தொடங்கியது. 

73 மாநில சட்டமன்ற இடங்களுக்குப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் காலை 10 மணி அளவில், தங்களின் வேட்பாளர் பாரத்தை நிர்வாக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். 

வேட்பாளர்களை ஆதரிக்க காலை 6 மணி தொடங்கி அனைத்து ஆதரவாளர்களும் வேட்புமனு தாக்கல் மையத்தின் முன் கூட தொடங்கியதை பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

இன்று காலை பெரும்பாலான பகுதிகளில் வானிலை நிலவரம் சீராக இருந்தாலும், பல இடங்களில் மழை பெய்யும் என்று, நேற்று மெட்மலேசியா அறிவித்திருந்தது.

இத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட 14 நாள் கால அவகாசம் தொடங்கி நவம்பர் 28-ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடையும்.

நவம்பர் 29-ஆம் தேதி 17-வது சபா மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.

அதற்கான முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)