Ad Banner
Ad Banner
 பொது

MAHB: நாளை முதல் ஒரு மாத கால விரிவான செயல் திட்டத்தை செயல்படுத்தும்

14/11/2025 07:20 PM

சிப்பாங், 14 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏ-இல் Aerotrain அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துவதற்காக (Malaysia Airports Holdings) நிறுவனம் எம்.ஏ.எச்.பி நாளை முதல் ஒரு மாத கால விரிவான செயல் திட்டம், சி.ஏ.பி-ஐ  செயல்படுத்தும்.

இந்த நடவடிக்கை எஞ்சியுள்ள இயலாமை பொறுப்பு காலம் டி.எல்.பியை பயன்படுத்தி, கட்டமைக்கப்பட்ட மற்றும் பல்வேறு நிலையிலான அணுகுமுறை மூலம் இந்த அமைப்பின் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் என்று எம்.ஏ.எச்.பி  நிர்வாக இயக்குனர் டத்தோ முஹமட் இசானி கானி கூறினார்.

போக்குவரத்து அமைச்சின் ஒப்புதலுடனும், தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம் ஏ.பி.ஏ.டி அங்கீகாரத்துடனும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க இரவு மணி 9 முதல் காலை மணி 7 வரை தினசரி ஆய்வுகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுடன் இந்தத் திட்டம் தொடங்கும் என்று டத்தோ முஹமட் இசானி கூறினார்.

"சி.ஏ.பி.-ஐ முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வோம் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்பு நாம் சந்தித்த அனைத்து சிக்கல்களும் உறுதிசெய்யப்பட்டு, இதை நாங்கள் முடிக்கிறோம். அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உண்மையில் பயனீட்டாளர்களுக்கு சரியாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்," என முஹமட் இசானி கானி கூறினார்.

இன்று, சி.ஏ.பி தொடர்புடைய செய்தியாளர் விளக்கமளிப்புக் கூட்டத்தில் டத்தோ முஹமட் இசானி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)