கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய நீர் தேவையை எதிர்கொள்ளும் போது, நீர்ப்பாசனம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், உணவுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்புக்கு, ஒரு முக்கியமான உள்கட்டமைப்பாக அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
நீர்ப்பாசனம் என்பது கடந்த காலத்தின் வழக்கற்றுப் போன நடைமுறையல்ல.
மாறாக, எதிர்காலத்திற்கான முதன்மைத் தேவையாக உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
''தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030-ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய நீர் தேவை விநியோகத்தை 40 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், நீர்ப்பாசனம் என்பது கடந்த காலத்தின் வழக்கற்றுப் போன நடைமுறை அல்ல. மாறாக நீர்ப்பாசனம் நமது எதிர்காலத்தின் முதன்மைத் தேவையாக உள்ளது. இந்த உண்மையைக் கருத்தில் கொள்ளுங்கள், உலகின் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் 20 விழுக்காடு பாசன வசதி பெறுகிறது, இருப்பினும் அது உலகின் 40 விழுக்காடு உணவை உற்பத்தி செய்கிறது,'' என்றார் அவர்.
இன்று நடைபெற்ற நான்காவது நீர்ப்பாசன கருத்தரங்கு, மூன்றாவது உயர்பட்ட ஆலோசனைக் குழு கூட்டம் மற்றும் 76-வது அனைத்துலக நிர்வாகக் குழு கூட்டம் ஆகியவற்றின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
நீர் நிர்வகிப்பில் எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பகிரப்பட்ட ஆய்வுகளில் முதலீடு செய்ய செய்து, பருவநிலை-திறன் நீர்ப்பாசனத்தில் தரநிலைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வட்டாரத்தில் அதிகரித்து வரும் உணவு தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)