Ad Banner
 பொது

ஜோகூரில் 615,120 மாணவர்கள் 2026 கல்வித் தவணையைத் தொடங்கினர்

12/01/2026 02:21 PM

குளுவாங், 12 ஜனவரி (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு லட்சத்து 15,120 மாணவர்கள் 2026-ஆம் ஆண்டு கல்வித் தவணையை தொடங்கியுள்ளதாக, கல்வி அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹசிம் தெரிவித்தார்.

அம்மாநிலத்தில் 55,406 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளதாகவும் இடைநிலைப் பள்ளிகளில் 47,237 மாணவர்கள்  முதலாம் படிவத்திற்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

''இன்று நம்மிடம் 53 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றார் அவர். 

இன்று குளுவாங்கில் உள்ள டத்தோ ஓன் ஜாஃபார் இடைநிலைப் பள்ளியை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடு முழுவதும் இன்று 53 லட்சம் மாணவர்கள் பள்ளித் தவணையை தொடங்கியுள்ளதாகவும் டாக்டர் அமினுடின் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]