புத்ராஜெயா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று புத்ராஜெயா சதுக்கத்தில் விமரிசையாக கொண்டாட்டப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், முழு திருப்தி அடைந்துள்ளார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சரித் ஃசோபியா கொண்டாட்டத்தில் இருந்து விடைபெற்றவுடன், அணிவகுப்பில் பங்கேற்றவர்களையும், கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடம் அன்வார் அளவளாவினார்.
இக்கொண்டாட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பங்களித்த அனைவருக்கும் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதாக பிரதமர் கூறினார்.
'மலேசிய வரலாற்றிலே இதை இனிய தருணமாக நினைக்கும் அதேவேளையில் பிள்ளைகளை நினைத்து நான் பெருமையடைகிறேன். நன்றாக கல்வி கற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார் அவர்.
மலேசியா மடானி; அரவணைக்கப்படும் மக்கள் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட தேசிய தின விழாவில், துணைப் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோருடன் தொடர்பு துறை அமைச்சரும் 2025ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தினம் HKHM-ம்மின் செயற்குழு தலைவருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலும் கலந்து கொண்டார்.
இதனிடையே, அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, மலேசியர்களின் ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை 2025ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் உணர்த்தியிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“அனைத்து மலேசியர்களிடையேயும் ஒற்றுமை மேலோங்கியுள்ளது என்றும், நமது வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த உணர்வில் கொண்டாடுவது மிகவும் நல்லது என்றும் நான் கருதுகிறேன்,'' என்றார் சாஹிட்.
தேசிய தின அணிவகுப்பிக்கான ஆதரவு மற்றும் இன்றைய கொண்டாட்டங்களின் மூலம் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய மற்றொரு துணைப் பிரதமரான டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்பும் அதே உணர்வை வெளிப்படுத்தி இருந்தார்.
நமது மன உறுதியுடன் கூடிய சிறந்த செயல்திறனுக்கான அடையாளமாக இது உள்ளது. அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக மலேசியர்களின் ஒற்றுமையை உறுதிசெய்ய நாம் ஒன்றுபடுவதுதான் இதில் முக்கிய அம்சக்கூறாகும்,'' என்றார் ஃபாடில்லா.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)