கோலாலம்பூர், 29 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று, வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்முதல் சட்ட மசோதா, அடுத்தாண்டு தொடக்கத்தில் முழுமையாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், புதுப்பிக்கவும் சரிபார்க்கவும் அமைச்சுக்கு அந்த கால அவகாசம் உதவும் என்று கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மஹ்மூட் மெரிக்கன் கூறினார்.
"எனவே, நான் குறிப்பிட்டது போல சட்டம் உள்ளது. அதோடு, உத்தரவு மற்றும் விதிமுறை, கொள்முதல் மற்றும் கொள்கை ஆகியவை உள்ளன. எனவே உத்தரவு விதிமுறையும், நிச்சயம் நமக்கு தற்போது நடப்பில் உள்ள வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், பின்னர் ஒரு செயல்முறை இருக்கும். தற்போது இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இச்சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மேம்படுத்தும் செயல்முறை இருக்கும்" என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை அரசு கொள்முதல் சட்ட மசோதா குறித்த இயங்களை வழியாக விளக்கமளித்த டத்தோ ஜொஹான் மஹ்மூட் மெரிக்கன் அவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கக் கொள்முதல் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைச் சேர்ப்பதோ அல்லது விரிவுபடுத்துவதோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)