Ad Banner
Ad Banner
 பொது

தாய்-கம்போடியா; அனைத்துலக கண்காணிப்பாளர்களை அதிகரிப்பதில் தலையீடு இல்லை

21/08/2025 04:03 PM

கோலாலம்பூர், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) --  தாய்லாந்து-கம்போடியாவில் போர்நிறுத்த செயல்முறையைக் கண்காணிக்க, அனைத்துலக கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பரிந்துரையில் எந்த தலையீட்டுக் கூறுகளும் இல்லை.

தற்காலிக கண்காணிப்புக் குழு, I-O-T-இன் ஆற்றலை வலுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்காணிப்பாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை குறித்த கவலையைக் கருத்தில் கொண்டும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''உதாரணத்திற்கு இப்போது நமக்குத் தேவையானது என்னவென்றால், பேங்காக்கில் பத்து பேரும், தாய்லாந்தில் இருவரும் உள்ளனர். மன்னிக்கவும் நோம் பென்னில் இருவர் உள்ளனர். எனவே, எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆகவே, அதை நாங்கள் தற்காப்புத் துறை மற்றும் தூதரகத்திலிருந்து எடுத்துக்கொள்கிறோம். அவை மிகவும் குறைவாக இருந்தால், தங்களின் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் அவர்கள் தங்கள் சொந்த தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்'', என்றார் அவர். 

தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் பரிந்துரையை முன்னதாக புதன்கிழமை நிராகரித்திருந்தார்.

அதோடு, தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லை மோதல் இருதரப்பு பிரச்சினை என்றும் அதில் வெளி நபர்கள் தலையிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)