Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் மகாதீருக்கு அன்வார் வாழ்த்து

10/07/2025 01:11 PM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- நூறாவது வயது பிறந்த நாளைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மகாதீரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தொடரும் அவரின் சேவையும் தேசத்திற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளது என்று அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

துன் டாக்டர் மகாதீர் தொடர்ந்து மன அமைதியோடும் உடல் வலிமையோடும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு தாங்கள் பிராத்தனை செய்து கொள்வதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா இஸ்மாயிலும் கூறியுள்ளனர்.

1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கெடா, அலோர் ஸ்டாரில் பிறந்த டாக்டர் மகாதீர் நாட்டின் அரசியல் வரலாற்றில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

1981 தொடங்கி 2003ஆம் ஆண்டு வரையிலும் மற்றும் 2018ஆம் ஆண்டிலும் அவர் பிரதமராக இருந்திருக்கின்றார்.

தமது 92-வது வயதில் இரண்டாவது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்ட போது, உலகின் மிக வயதான பிரதமர் என்றப் பெருமையைப் டாக்டர் மகாதீர் பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)