பெர்சியாரான் கே.எல்.சி.சி, 09 ஜூலை (பெர்னாமா) -- உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் ஆசியான் உறுதியுடனும் தெளிவான திசையுடனும் செயல்பட வேண்டும்.
மக்களுக்கு உறுதியான நன்மைகளைக் கொண்டுவரும் வட்டார ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இணைப்பு, உணவு உத்தரவாதம், இலக்கவியல் உருமாற்றம், கல்வி, பொது சுகாதாரம் மற்றும் பருவநிலை மீள்தன்மை போன்ற முக்கிய விவகாரங்களைத் தொடும் நடைமுறை ஒத்துழைப்பு வடிவங்களில் தற்போதைய ஆசியான் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆசியானின் உண்மையான பிரதிபலிப்பும் உறுதிப்பாடும், தனிப்பட்ட முறையில் அல்லாமல் முழுமையான சமூகத்தின் உணர்வுகள் மற்றும் குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது உணர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
''டத்தோ ஸ்ரீ முஹமட் ஹாசான் பிரதிபலிக்கும் ஆசியான், எளிமையாக உருவாக்கப்பட்டதல்ல. பிரிவினையின் ஆபத்துகளையும் உரையாடலின் வாக்குறுதியையும் புரிந்துகொண்ட நாடுகளால் இது சிக்கலான முறையில் உருவாக்கப்பட்டது. ஆயினும் கூட, சில வட்டாரங்கள் சமமாக இருக்கக்கூடிய வழிகளில் அமைதியையும், செழிப்பையும் விரிவுபடுத்தியுள்ளோம். ஒத்துழைப்புப் பழக்கத்தை வளர்ப்பதன் மூலம், தொடர்ந்து ஈடுபடுவதற்கான விருப்பத்தை நாங்கள் அவ்வாறு செய்தோம்'', என்றார் அவர்.
இதனிடையே, வரும் அக்டோபரில் முழு ஆசியான் உறுப்பினராக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் திமோர் லெஸ்தேவின் சாத்தியமான நுழைவையும் தாம் வரவேற்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"ஆசியான் தனது மதிப்பை நிரூபிக்கும் இடம் இதுதான். வெறும் அறிக்கைகளில் மட்டுமல்ல. மாறாக, நமது வட்டாரத்தை வலுப்படுத்துவது மற்றும் நமது மக்களுக்கு சேவை செய்யும் விளைவுகளில் உள்ளது. எனவே ஆசியான் தொடர்ந்து பொருந்தியதாக, உறுதியானதாக மற்றும் மரியாதைக்குரியதாகவும் இருக்கும் என்ற நமது நம்பிக்கையை இக்கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தும்", என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)