ஜோகூர் பாரு, 07 ஜூலை (பெர்னாமா) - இன்று, ஜோகூர் பாரு, தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மற்றும் சிமெண்டு ஏற்றிச் சென்ற டிரெய்லரை உட்படுத்தி நிகழ்ந்த விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்த வேளையில், வேன் ஓட்டுநரான பெண் ஒருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.
டிரெய்லர் ஓட்டுநர் உட்பட இதர 19 சிறார்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செயல்பாட்டு கமாண்டர், இரண்டாவது மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் அசிசி சக்காரியா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்விபத்து குறித்து நண்பகல் மணி 1.10க்கு தமது தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாகவும், ஒரு தீயணைப்பு வாகனம் உட்பட 10 தீயணைப்பு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் அவ்வறிக்கையில் விவரித்தார்.
இவ்விபத்தில் 24 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாணவன் ஒருவனும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளனர்.
சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட அந்தப் பெண் ஓட்டுநர் வெளியே கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
காயமடைந்த அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)