ஜார்ஜ்டவுன், 08 ஜூலை (பெர்னாமா) -- ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பகடிவதைக்கு உள்ளான T. நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் தற்காப்பு வாதத்தை நவம்பர் 17 முதல் 25-ஆம் தேதி வரை பினாங்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
26 வயது ஜே.ராஜசுதன், எஸ்.கோகுலன் உட்பட மேலும் இருவரின் வாதங்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் புதிய தேதிகளை நிர்ணயித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு ஆடவரான 34 வயது எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டின் முடிவுக்காக அரசு தர்ப்பு வழக்கறிஞர்கள் காத்திருக்கின்றனர்.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிபதி டத்தோ முஹமட் ரட்ஸி அப்துல் ஹமிட் அத்தேதியை நிர்ணயித்தார்.
இரட்டிப்பாக அல்லது மீண்டும் விசாரணை மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அவர் கூறினார்.
மேலும், சாட்சிகள் மீண்டும் அழைக்கப்படுவதோடு அண்மைய தகவல்களைப் பெறுவதற்கு வழக்கு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்து விடுதலை செய்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அரசு தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்த பின்னர், நால்வரும் தங்களின் வாதங்களை முன்வைக்க, ஜனவரி 13-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)