கராச்சி , 07 ஜூலை (பெர்னாமா) -- பாகிஸ்தான், கராச்சியில் குடியிருப்புக் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த இரண்டு நாள்களாக, அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பலி எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை மீட்பு பணிகள் நீடித்ததாக மூத்த அரசாங்க அதிகாரி ஜாவிட் நபி தெரிவித்தார்.
இந்த மீட்பு நடவடிக்கையில் மொத்தம் 27 உடல்கள் மீட்கப்பட்டன
பலியானவர்களில், மூன்று குழந்தைகள் உட்பட 15 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் அடங்குவர்.
முன்னதாக, இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சிந்து மாகாண அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளதாக அதன் முதலமைச்சர் முராட் அலி ஷா தெரிவித்திருந்தார்.
கராச்சியில் 480-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், வெளியேறுவதற்கு அதிகாரிகள் உத்தரவிடுத்தும் மக்கள் அதனை எதிர்ப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)