ஷா ஆலம், 02 ஜூலை (பெர்னாமா) -- செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் பண்டான் டிராபிகானாஅமானில், ஐந்து சொகுசு வாகனங்களுக்கு தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காலை மணி 6.45-க்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக ஆடவர் ஒருவரிடம் இருந்து தமது தரப்புக்கு அழைப்பு கிடைத்ததாக கோலா லாங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன் முஹமாட் அக்மால்ரிசால் ரட்சி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் ஓர் ஆடவர் என்பதும், சம்பவம் நிகழ்ந்த போது அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டதாக என்று முஹமாட் அக்மால்ரிசால் குறிப்பிட்டார்.
விசாரணையில் நான்கு ஆடவர்கள் கார்களுக்கு தீ வைத்தது கண்டறியப்பட்டது என்றும் போலீசார் அச்சந்தேக நபர்களை தற்போது தீவிரமாகத் தேடி வருவதாக அவர் கூறினார்.
14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும், குற்றவியல் சட்டம் செக்ஷன் 435-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் வீட்டின் முன்பக்கம் சேதம் அடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவருக்கும் 16 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முஹமாட் அக்மால்ரிசால் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)