BREAKING NEWS   Malaysia hopes ASEAN-Canada Free Trade Agreement negotiations can be concluded soonest possible for mutual benefit - PM Anwar | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து; 70% சேதம்

03/07/2025 04:23 PM

செமினி, 03 ஜூலை (பெர்னாமா) --   இன்று காலை, சிலாங்கூர், செமினி, ஜாலான் பாங்கி பத்துவில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அத்தொழிற்சாலை 70 விழுக்காடு சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காலை மணி 6.33 அளவில் அழைப்பு கிடைத்த நிலையில், சுமார் 12 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

செமினி, பாங்கி, காஜாங், பண்டான் இண்டா மற்றும் மந்தின் ஆகிய ஐந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து 37 உறுப்பினர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஐந்து FRT இயந்திரங்கள், மூன்று நீர் சேமிப்பு தொட்டி மற்றும் அவரச சிகிச்சை மீட்பு சேவை EMRS ஆகியவையும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

10000 சதுர அடி பரப்பளவு கொண்ட தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் ஹஃபிசுல் பின் கசாட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)