புத்ராஜெயா, 01 ஜூலை (பெர்னாமா) -- மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்ததாகக் கூறப்படும் கூடுதல் ஆவணம் இருப்பது தொடர்பாக தேசிய சட்டத்துறைத் தலைவர் செய்த மேல்முறையீட்டிற்கு எதிராக டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் எழுப்பிய தொடக்க ஆட்சேபனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தேசிய சட்டத்துறைத் தலைவர் எழுப்பிய ஏழு சட்டக் கேள்விகளையும் நீதிமன்றத்தால் விசாரிக்கவும் மறுபரிசீலனை செய்யவும் முடியும் என்று மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முஹமட் ஹஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
தேசிய சட்டத்துறைத் தலைவரின் மேல்முறையீட்டை நாளை விசாரிக்க அக்குழு நிர்ணயித்தது.
கூடுதல் ஆவணம் தொடர்பான மேல்முறையீட்டைத் தொடர தேசிய சட்டத்துறைத் தலைவருக்குக் கூட்டரசு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)