ஷா ஆலம், 01 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு நாசவேலை, தேசத்துரோகம் அல்லது அலட்சியம் போன்ற எந்த கூறுகளும் இல்லை என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, என்.எஃப்.ஏ எனப்படும் அடுத்த தொடர் நடவடிக்கை இல்லை என்று போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.
புதிய ஆதாரங்கள் அல்லது தகவல்கள் கண்டறியப்பட்டால், சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க தமது தரப்பு உறுதிக் கொண்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
''நாங்கள் திருப்தி அடைகிறோம், தற்போதைக்கு இந்த விசாரணையை நிறைவுச் செய்கின்றோம். இருப்பினும், புதிய தகவல்கள் கிடைத்தால் எந்த நேரத்திலும் அதை மீண்டும் திறக்கலாம்'', என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனை கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)