Ad Banner
Ad Banner
 பொது

கிள்ளான் துப்பாக்கிச் சூடு சம்பவம்; குண்டர் கும்பலுக்கு தொடர்பு உள்ளது

01/07/2025 05:22 PM

ஷா ஆலம், 01 ஜூலை (பெர்னாமா) --   கடந்த ஜூன் 20-ஆம் தேதி, கிள்ளான், மேருவில் உள்ள மோட்டார் சைக்கிள் கடைக்கு அருகில் ஒருவர் சூட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், குண்டர் கும்பல் ஈடுபட்டிருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

இதுவரை, 25 மற்றும் 40 வயதுக்குட்பட்ட இரண்டு உள்நாட்டினர் கைது செய்யப்பட்டதோடு, விசாரணைக்கு உதவும் வகையில் 12 பொது சாட்சிகளையும் அழைத்திருப்பதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.

''இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் தனியாக வேலை செய்கின்றார்கள். அவர் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, விசாரணைக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் கூறினார்.

அச்சம்பவத்தில் கூலிப் படை ஈடுபட்டிருக்கின்றாரா அல்லது குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உசேன் தெரிவித்தார்.

கிள்ளான், மேருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு முன்புறத்தில், மிக அருகிலிருந்து சுடப்பட்டதாக நம்பப்படும் 46 வயதான உள்நாட்டு ஆடவர் ஒருவர், காரின் இருக்கையில் இறந்த கிடந்ததாக, கடந்த மாதம் ஜூன் 20-ஆம் தேதி வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்.விஜய ராவ் உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)