Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் பலி

29/06/2025 05:49 PM

ஒடிசா, 29 ஜூன் (பெர்னாமா) -- இந்தியா, ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில், பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்தனர்.  

10 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கூடிய நிலையில் எதிர்பாராதவிதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், சில பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்ததாகவும் பாதுகாப்பு கருதி பக்தர்கள் ஆங்காங்கே ஓடியதாகவும் போலீஸ் கூறியது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். 

இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததற்கு போலீசார் முறையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளாததே காரணம் என்று ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள் சிலர் குற்றம் சாட்டினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)