கோலாலம்பூர், 28 ஜூன் (பெர்னாமா) -- 13-வது மலேசியத் திட்டம், ஆர்.எம்.கே13-ஐ மறுஆய்வு செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை கண்மூடித்தனமான செயல் அல்ல.
மாறாக, பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட திட்ட வரைவில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக அதற்கான விவாதம் தொடங்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''கடந்த 2 புதன்கிழமைகளாக தாக்கல் செய்யப்பட்டதில், ஆய்வு செய்ய வேண்டிய பல விஷயங்களை கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. எனவே 2 புதன்கிழமைகளுக்கு முன்னரே, பிரதமர் கண்காணிக்க கூறினார். நேற்று அல்ல, கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே அவர் கூறிவிட்டார். அனைத்து அமைச்சுகளும் அத்திட்ட வரைவை சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அனைத்து அமைச்சுகளும் தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பொருளாதார அமைச்சிற்கு வழங்கும்படி கூறப்பட்டது,'' என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில், அனைத்து அமைச்சுகளின் கருத்துகளையும் பரிசீலிக்க கடந்த வாரம் திங்கட்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகவும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]