Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வரி விதிப்பு பேச்சுவார்த்தை விரைவுப்படுத்தப்பட வேண்டும் - ஜெர்மனி 

28/06/2025 05:59 PM

பெர்லின், 28 ஜூன் (பெர்னாமா) - பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஜெர்மனிய அதிபர் ஃப்ரிட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் 90 நாள்களுக்கு அதற்கான தடையை அமல்படுத்தி இருக்கும் நிலையில் பிரசல்சும் வாஷிங்டனும் தற்போது பதற்றங்களை எதிர்நோக்கி வருகின்றன. 

ஜெர்மனியின் வாகனத் துறைக்கு அமெரிக்கா மிகப் பெரிய வெளிநாட்டுச் சந்தையாக விளங்கி வருகிறது. 

இவ்வேளையில், கடந்தாண்டு ஜெர்மனி தயாரிப்பிலான சுமார் 450,000 வாகனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 

விதிக்கப்பட்டிருக்கும் இந்த காலக்கெடுவிற்கு முன்னரே வாஷிங்டனில் உள்ள தங்கள் சகாக்களுடன் ஓர் உடன்பாட்டை எட்ட ஐரோப்பிய ஆணைய வர்த்தக அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]