Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இறக்குமதி செய்யப்பட்ட சில பழங்களுக்கு எஸ்.எஸ்.டி வரி விலக்கு

26/06/2025 03:35 PM

கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- குறைந்த வருமானம் பெறுபவர்கள், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்ய முடியும் என்பதை உறுதி செய்ய, ஆப்பிள், ஆரஞ்சு உட்பட சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களுக்கு, அரசாங்கம் SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விலக்கு அளிக்கும்.

நேற்று தாம் தலைமையேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதன் தொடர்பில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை உயர்வு குறித்த மக்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விலக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பதை ஊக்குவிப்பதற்கு, ஊட்டச்சத்துகள் நிறைந்த மற்றும் பருவத்திற்கு ஏற்ப எளிதாகப் பெறக்கூடிய உள்ளூர் பழங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)