ஜோகூர் பாரு, 17 மே (பெர்னாமா) -- எந்தவொரு புகார் கிடைத்தாலும், விசாரணைக்கு எந்தவொரு தனிநபரையும் அழைக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-க்கு உரிமை உள்ளது.
மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், விசாரணை அறிக்கை திறக்கப்படவிருப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
''வழக்கமாக புகார் இருந்தால், விசாரணைக்காக அவர்கள் விசாரணை அறிக்கையைத் திறப்பார்கள். அதன் பின்னர், அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சமர்ப்பிப்பார்கள். புகார் இருந்தால், வழக்கமாக எம்சிஎம்சி அவசியம் என்று நினைத்தால், நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு,'' என்றார் அவர்.
சனிக்கிழமை, ஜோகூர், ஶ்ரீ ஸ்டுலாங் பிபிஆர் பல்நோக்கு மண்டபத்தில், 'Kita MADANI X Program MADANI Rakyat (PMR)'' நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)