ஒட்டாவா, 13 மே (பெர்னாமா) -- 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி, உக்ரேன் வான்வெளியில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து மன்றம், ICAO நேற்று தீர்ப்பளித்தது.
அச்சம்பவத்தில், மொத்தம் 298 பயணிகளும் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக, நெதர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பொருத்தமான இழப்பீட்டு முறைகள் குறித்து, இன்னும் சில வாரங்களில் ICAO பரிசீலிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி, எம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி பயணித்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH17, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய துருப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான போரின் போது கிழக்கு உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டதாக ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும், உக்ரேனைச் சேர்ந்த ஒரு நபரையும் குற்றவாளிகள் என, கடந்த 2022-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நீதிபதிகள் அறிவித்தனர்.
அவர்களின் அந்த அறிவிப்பை ஏற்க மறுத்ததோடு, தனது குடிமக்களை வேறு நாட்டிற்கு அனுப்பப் போவதில்லை என்று மாஸ்கோ கூறியது.
எனினும், அவ்விவகாரம் குறித்து ICAO உடனடியாக பதிலளிக்கவில்லை.
2022-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் அவ்வழக்கு விசாரணையைத் தொடங்கின.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)