மட்ரிட், 30 ஏப்ரல் (பெர்னாமா) -- மட்ரிட் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு காஸ்பர் ரூட் தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற சிறந்த 16 ஆட்டங்களில், அவர் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ்வுடன் விளையாடினார்.
இந்த ஆட்டம், நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூட் எளிதாகவே அமைந்தது.
முதல் செட்டில் 7-5 என்று வெற்றி பெற்ற ரூட் , இரண்டாம் செட்டில் 6-4 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை கைப்பற்றினார்.
மற்றோர் ஆட்டத்தில், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவுடன் மோதினார்.
இவ்வாட்டத்தில் மெட்வெடேவ் 3-6 6-1 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான பிரிவில், உலகின் முதல் நிலை விளையாட்டாளர் அரினா சபலென்கா, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸ்வுடன் களம் கண்டார்.
இவ்வாட்டத்தை 6-2 6-4 என்ற நேரடி செட்களில் பெலாருசின் அரினா சபலென்கா கைப்பற்றி காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)