Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஆந்திர பிரதேசம்; கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் எண்மர் பலி

30/04/2025 04:25 PM

ஆந்திர பிரதேசம், 30 ஏப்ரல் (பெர்னாமா) --   இந்தியா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் எண்மர் பலியாகினர்.

மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆந்திராவின் அமராவதி பகுதியிலிருந்து வடகிழக்கே சுமார் 393 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் நடைபெறும் சந்தன உற்சவ விழாவிற்கு பக்தர்கள் வருகைத் தந்திருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக 6.1 மீட்டர் நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்ததபோது கோயிலுக்குள் நுழைய வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மாநில பேரிடர் மீட்புக் குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இச்சம்பவத்திற்கான உண்மை காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)