Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

இஸ்மாயில் சப்ரியை எஸ்பிஆர்எம் ஓரிரு வாரங்களில் அழைக்கும்

29/04/2025 03:53 PM

புத்ராஜெயா, 29 ஏப்ரல் (பெர்னாமா) -  முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் சொத்து தொடர்பான வழக்கு விசாரணையை நிறைவு செய்வதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம்  அவரை அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு பெரா நாடாளுமன்ற உறுப்பினரான அவரிடமிருந்து  பல கூடுதல் ஆவணங்களை தமது தரப்பு கோரியுள்ளதாகவும், தற்போது அது 15 முதல் 20 விழுக்காட்டை மட்டும் எட்டியுள்ளதாகவும் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டன் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

"நான் குறிப்பிட்டது போன்று, இந்த முறை அவரது சொத்து அறிவிப்புகள் தொடர்புடையது. எனவே, இந்த சொந்தின் விவரங்களை உட்படுத்திய விசாரணையைப் பற்றி பேசும்போது, உண்மையின் சிறிது நேரம் எடுக்கும். அது அவருடைய பொறுப்பு. சொத்தை கண்டுப்பிடிப்பதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிட்ட நிறுவனமாக எங்களை திருப்திப்படுத்த அவர் காரணத்தையும் விளக்கினார்," என்றார் அவர்

இன்று, புத்ராஜெயாவில் 2025-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய ஊழல் எதிர்ப்பு  மாநாட்டில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)