பியோங்யாங், 28 ஏப்ரல் (பெர்னாமா) - உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து போரிட தனது படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் தலைவர் கிம் ஜோன் உன்னின் கட்டளைக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டதாக வட கொரியா விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யாவின் சில பகுதிகளை உக்ரேன் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நிலையில் அதிலிருந்து ரஷ்யாவை விடுவிப்பதில் வட கொரியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இது கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கையெழுத்திட்ட வியூக கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இராணுவத் துருப்புக்களை அனுப்ப கிம் ஜோன் உன் முடிவெடுத்ததாக வட கொரியா விளக்கம் அளித்துள்ளது.
நீதிக்காக போராடும் ரஷ்யாவுக்கு உதவும் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டணியை நிரூபித்திருப்பதாக வட கொரிய செய்தி நிறுவனம் KCNA தெரிவித்திருக்கிறது.
3000 கூடுதல் உறுப்பினர்கள் உட்பட வடகொரியா இதுவை 14,000 இராணுவ உறுப்பினர்களை அனுப்பியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)