ஜார்ஜ்டவுன், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- 2024 / 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.
இன்று புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஜேடிதியும் ஶ்ரீ பஹாங்கும் மோதவுள்ளன.
“புக்கிட் ஜாலீல் அரங்கின் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. போலீஸ் தரப்பிடமிருந்தும் எங்களுக்கு ஒத்துழைப்பு உள்ளது. இன்றிரவு எல்லாம் சுமுகமாக நடைபெறும் என்று ஜோகூர் மற்றும் பகாங் காற்பந்து ரசிகர்களுடன் நானும் நம்பிக்கையுடன் உள்ளேன்”, என்று அவர் கூறினார்.
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜேடிதியும் ஶ்ரீ பஹாங்கும் களம் கண்டன.
இவ்வாட்டத்தில், 5-3 என்ற பினால்டி கோல்களின் வழி, ஶ்ரீ பஹாங் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், எஃப்.ஏ மற்றும் சூப்பர் லீக் கிண்ணங்களை முன்னதாகவே வென்றிருக்கும் ஜேடிதி, இன்று மலேசிய கிண்ணத்தையும் கைப்பற்றினால், ஒரே பருவத்தில் மூன்று வெற்றியை பதிவு செய்த ஒரே அணி என்ற பெருமையைப் பெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)