உலகம்

இந்தோனேசியா: ருவாங் எரிமலை வெடிக்கத் தொடங்கியது

17/04/2024 07:43 PM

ஜகார்த்தா, 17 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தோனேசியா வட சுலாவேசியில் உள்ள ருவாங் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ருவாங் தீவில் உள்ள அந்த எரிமலை நேற்றிரவு தொடங்கி மூன்று முறை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெடிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், அத்தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எரிமலையின் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ருவாங் தீவில் சுமார் 838 பேர் வசித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)