பொது

மலாக்காவில் திடீர் வெள்ளம்; 122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

15/04/2024 07:58 PM

ஆயர் குரோ, 15 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று மாலை முதல் மலாக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து மொத்தம் 122 பேர் அங்குள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி, ஆயர் கெரோவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் வெள்ளத்தால் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருநாள் காலத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள நிலைமை அங்குள்ள மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் மலாக்கா மாநில இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் கமாருல்சியா முஸ்லிம் தெரிவித்தார்.

அதேவேளயில் அலோர் காஜா மாவட்டத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 72 பேரும், பாலாய் ராயா புக்கிட் பாலாயில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேரும் வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் விவரித்திருந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502