பொது

நாட்டின் அரிசி கையிருப்பு போதுமானது, அரசாங்கம் உத்தரவாதம்

08/04/2024 08:06 PM

புத்ராஜெயா, 8 ஏப்ரல் (பெர்னாமா) -- முடைக்கால அரிசி கையிருப்பான 290,000 டன் மெட்ரிக் உட்பட, நாட்டின் அரிசி கையிருப்பு தற்போது 1,096,964 டன் மெட்ரிக் ஆக உள்ளது.

அந்த கையிருப்பு நிலையானதோடு, 5.48 மாத காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

நாட்டின் பிரதான உணவான அரிசி,  மலேசியர்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது நாட்டின் மொத்த அரிசி கையிருப்பின் அளவு, வட்டாரத்தில் மிக உயர்ந்த மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒன்றாகும்.

கடந்த மாதம், NACCOL எனப்படும் வாழ்க்கை செலவினத்திற்கான தேசிய நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டதைபோல், உள்ளூர் வெள்ளை அரிசி, BPT-இன் விநியோகம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதோடு, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, BPI-இன் விலையும் ரிம2 முதல் ரிம3 வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

12 அரிசி அலை முன்முயற்சி உட்பட, உள்ளூர் அரிசி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் செயல்படுத்துகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)