விளையாட்டு

எனது ஓய்வை வயது தீர்மானிக்காது-லியோனல் மெஸ்சி

29/03/2024 07:09 PM

பியூனஸ் அயர்ஸ், 29 மார்ச் (பெர்னாமா) -- உலக காற்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதை தமது வயது தீர்மானிக்காது என்று கூறுகின்றார் அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்சி.

எட்டு முறை Ballon d'Or விருதை வென்றிருக்கும் அவர், சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் போனால் மட்டுமே, ஓய்வு பெறுவதாக தெளிவுபடுத்தினார்.

ஸ்பெயின் பார்சிலோனாவில் 17 ஆண்டுக்காலம் தமது காற்பந்து வாழ்வில் உச்சத்தை எட்டிய லியோனல் மெஸ்சி, பின்னர் 2021-ஆம் ஆண்டில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பில் இணைந்து விளையாடினார்.

தற்போது அவர் இன்டர் மியாமி கிளப்பில் தமது காற்பந்து பயணத்தை தொடர்கிறார்.

காற்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற தமது வயது காரணமல்ல என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார்.

கட்டார் உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தந்ததன் வழி, அதன் 36 ஆண்டுக்கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்து தமது வாழ்நாள் கனவை, 2022-ஆம் ஆண்டில் மெஸ்சி நிறைவேற்றினார்.

அந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான பிரான்சை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அர்ஜென்டினா வெற்றியாளர் ஆனது.

இந்த வெற்றியின் மூலம் மெஸ்சி எட்டாவது முறையாக Ballon d'Or உடன் பல்வேறு விருதுகளையும் வென்றார்.

அதோடு, 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆட்டக்காரர்ராகவும் அவர் தேர்வானார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)