பொது

புலமைப் பெற்ற மனித மூலதனத்தை உருவாக்க பினாங்கு முயற்சி

28/03/2024 06:13 PM

ஜார்ஜ்டவுன், 28 மார்ச் (பெர்னாமா) -- ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி நிலைகளில் இருந்து, STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் புலமைப் பெற்றிருக்கும் மனித மூலனத்தை உருவாக்க பினாங்கு மாநிலம், முயற்சிகளை அதிகரிக்கும்.

தொழில்நுட்ப முதலீட்டு இடமாக மலேசியா தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதால் அந்த முயற்சி அவசியமானது என்று அம்மாநில முதலமைச்சர் சோவ் கொன் இயோவ் கூறினார்.

பல்வேறு STEM திட்டங்களின் வழியாக மாநிலத்தில் உள்ள பள்ளிகளை அணுகி பினாங்கு அறிவியல் மையங்கள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப அது அமைந்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற 31-வது வடக்கு மண்டல. அமலாக்கத் தரப்பு, NCIA கூட்டத்தில் எழுப்பப்பட்ட விவகாரங்களில் STEM மனித மூலதன பிரச்சனையும் அடங்கும் என்றும் சோவ் கூறினார்.

''கண் சிமிட்டும் நேரத்தில் மனித மூலதனத்தை உருவாக்க முடியாது, அதற்கு ஆரம்பப் பள்ளி மட்டத்திலிருந்து நீண்ட திட்டமிடல் தேவைப்படுகிறது. இது ஒரு நீண்ட கால முயற்சி. ஆனால் மிகவும் அவசியமானது. அதைச் செய்யாவிட்டால் நாம் மிகவும் பின்தங்கிவிடுவோம்'', என்றார் அவர். 

பினாங்கு, பயான் லெப்பாசில் இன்று, Journey To First Tech Challenge World Championship எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின்னஎ செய்தியாளர்களிடம் அவர் அதனைக் கூறினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)