பொது

இணைய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய துறையை உருவாக்க எண்ணம் 

25/03/2024 07:17 PM

கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- இணைய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய துறை ஒன்றை உருவாக்குவதற்கு அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் எண்ணம் கொண்டுள்ளது. 

இலக்கவியல் மற்றும் உயர் தொழில்நுட்பம் குற்றங்களினால் ஏற்படும் சவால்களைக் கையாள்வதற்கு இந்தத் துறை அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார். 

"குற்றச்செயல்களைக் கையாள்வதில் பி.டி.ஆர்.எம்-இன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தற்போது சவாலானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது என்பதை மறுக்க முடியாது மற்றும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று. இலக்கவியல் தொழில்நுட்பம் உலகையும் நமது அன்றாட வாழ்க்கையிலும் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உட்பட பல்வேறு புதிய குற்றச்செயல்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பங்களித்துள்ளது," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 217ஆவது போலீஸ் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய ரசாருடின் அவ்வாறு கூறினார். 

சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்ய பிடிஆர்எம் புதிய உபகரணங்களை கொண்டிருக்க  வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)