விளையாட்டு

ஓமனிடம் மலேசியா தோல்வி

22/03/2024 07:10 PM

மஸ்கட், 22 மார்ச் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ணம், 2027 ஆசியக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றில் மலேசியா தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற D குழுவுக்கான ஆட்டத்தில் மலேசியா ஓமானிடம் 0-2 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

இவ்வாட்டம் மஸ்கட்டில் நடைபெற்றதால் ஓமான் கூடுதல் பலத்துடன் விளையாடியது.

இருப்பினும், முதல் பாதி ஆட்டத்தில் ஓமான் மேற்கொண்ட முயற்சிகளை நாட்டின் கோல் காவலர் அஹ்மட் ஷிஹான் ஹஸ்மி முஹமட் தடுத்து நிறுத்தினார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில், கோல் போடும் வேட்கையில் களமிறங்கிய இரு குழுக்களில், 58ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஓமான் முந்திக் கொண்டது.

ஆட்டத்தை சமப்படுத்த மலேசியா முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் இரண்டாவது கோலை அடித்து ஓமான் தனது வெற்றியை உறுதி செய்துக் கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)