விளையாட்டு

அமெரிக்கா மயாமி ஏ.டி.பி பொது டென்னிஸ் போட்டி; ஏண்டி மூரே இரண்டாவது சுற்றுக்கு தகுதி

21/03/2024 08:53 PM

அமெரிக்கா, 21 மார்ச் (பெர்னாமா) -- மயாமி ஏ.டி.பி பொது டென்னிஸ் போட்டி.

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான பிரிட்டனின் ஏண்டி முரே இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் செட்டில், 4-6 என்று மட்டியோ பெரெட்டினியிடம் தோல்வி கண்ட ஏண்டி முரே அடுத்த இரண்டு செட்களை போராடி வென்றார்.

அதில், 36 வயதுடைய முரே, 6-3 மற்றும் 6-4 என்று பெரெட்டினியை தோல்வி அடையச் செய்தார்.

அடுத்த சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் தோமஸ் மார்டின் எட்செவெரி உடன் களம் காணவிருக்கின்றார்.

இதனிடையே, அமெரிக்காவின் இளம் விளையாட்டாளரான மார்டின் டாம் ஜூனியர் சீனாவின் சாங் சிசெனை 7-6 மற்றும் 7-6 என்று நேரடி செட்களில் வீழ்த்தில் அடுத்த சுற்றில் கால் வைத்துள்ளார்.

அதேபோல, ஹங்கேரியின் மார்டன் ஃபுக்சொவிக்ஸ் ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பெர்செல்லை 6-2 மற்றும் 6-1 என்ற நிலையில் தோற்கடித்ததன் வழி அடுத்த ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடெவ்வை சந்திக்கவிருக்கின்றார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]