விளையாட்டு

விளையாட்டுத் துறையிலிருந்து விடைபெறவுள்ளார் தேசிய உடற்கட்டழகர் 'மைக்'

20/03/2024 07:29 PM

கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- தமது 26 ஆண்டு கால அர்ப்பணிப்புக்கு பின்னர் நாட்டின் விளையாட்டுத் துறையிலிருந்து  விடைபெற போவதை, தேசிய உடல் கட்டழகர் டத்தோ ஸ்ஷாரூல் அஸ்மான் மஹேன் அப்துல்லா  அறிவிக்கவுள்ளார்.

அதன் தொடர்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

மலேசியாவில் மைக் என்று நன்கு அறியப்படும் 50 வயதுடைய மஹேன் அப்துல்லா, புதிய தலைமுறை விளையாட்டாளர்களுக்கு இடமளிக்கும் வகையில், ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்களே, தமது  இந்த முடிவிற்கு முக்கிய காரணம் என்பதை, இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியிருக்கின்றார். 

இது தமக்கு கடினமான முடிவாக இருந்தாலும், ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என்றும் மைக் நம்புகின்றார். 

24 வயதிலிருந்து உடற்கட்டழகர் போட்டிகளில் தம்மை  ஈடுபடுத்திக்கொண்ட அவர், ஆறு முறை உலக வெற்றியாளர் பட்டம் வென்றது உட்பட அனைத்துல ரீதியில் பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)