பொது

கடல் வழித்தடத்தைப் பயன்படுத்தி காசாவிற்கு 200 டன் உதவிப் பொருட்கள்

16/03/2024 07:36 PM

காசா, 16 மார்ச் (பெர்னாமா) -- சைப்ரஸில் இருந்து புதிய கடல் வழித்தடத்தைப் பயன்படுத்தி, காசாவிற்கு 200 டன் உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல், உதவி பொருட்கள் அடங்கிய அதன் சரக்குகளை நேற்று தரையிறக்கத் தொடங்கியது.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக போரை எதிர்கொண்டு, பசிப்பிணியால் வாடி வரும் காசா மக்களுக்கு உதவுவதற்கு, 200 டன் உணவுப் பொருட்கள் அடங்கிய உதவிக் கப்பல் ஒன்று சைப்ரஸில் இருநது செவ்வாய்க்கிழமை புறப்பட்ட்டது.

மாவு, அரிசி மற்றும் புரத சத்துகள் நிறைந்த உணவு பொருட்கள் உடன் மற்றும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களோடும் அந்த கப்பல் லார்னாகா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடல் வழித்தட திட்டத்தின் மூலம் இந்த உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசாவில் குறைந்தது 149 கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கான் யூனிஸ் நகரம் மற்றும் வடப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அங்கு விமானத் தாக்குதல்கள் மற்றும் சண்டைகள் நடந்ததாகவும் அவற்றைப் பார்த்த சாட்சிகள் கூறின.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)