பொது

மலேசியாவில் வணிகம் & முதலீட்டை விரிவுப்படுத்த ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு அன்வார் அழைப்பு

05/03/2024 05:29 PM

மெல்பெர்ன், 05 மார்ச் (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மெல்பெர்னில் 18 ஆஸ்திரேலிய நிறுவனங்களின் வணிகத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

மேலும், மலேசியாவில் வணிகம் மற்றும் முதலீட்டை விரிவுப்படுத்தவும் அவர்களை ஊக்குவித்திருந்தார்.

அவர்களுடனான வட்டமேசை கலந்தாலோசிப்புக்குப் பின்னர், நாட்டின் நிதியமைச்சருமான அன்வார், ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள், மருத்துவ சாதனங்கள், உலோகங்கள் உட்பட உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள், ஆகியோருடன் தரவு மையங்கள், நிதி மற்றும் வர்த்தகம் போன்ற சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும் அதில் உட்படுத்தப்பட்டனர்.

மலேசியா தனது தலைமைத்துவத்தின் கீழ், தெளிவான மற்றும் பயனுள்ள புதிய கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளதன் வாயிலாக, இதற்கு முன்னர் இல்லாத அளவிலான முதலீட்டிற்கு பங்களித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவிற்கு அதிகமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வலுவான அரசாங்கம் தற்போது முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதையும் அவர் கோடி காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)