GE15 NEWS  
விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் ராஃபெயல்

03/02/2023 08:05 PM

பாரிஸ், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- பிரான்ஸ் காற்பந்து நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகின்ற வேளையில், தற்காப்பு ஆட்டக்காரரான ரபாயல் வரன் தமது ஓய்வை அறிவித்துள்ளார். 

காற்பந்து உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான அவர், தமது காற்பந்து வாழ்க்கையை வெற்றிகரமான 2018 உலகக் கிண்ணத்துடன் முடித்துக் கொண்டார்.

2013-ஆம் ஆண்டில், அறிமுகமானது முதல், 93 போட்டிகளில் விளையாடிய ரபாயல் வரன் , 2020-2021 பருவத்தில் UEFA கிண்ணத்தை வெல்வதில் டிடியர் டெஸ்டாமிற்கு உதவினார்.

29 வயதான அவர் , புதிய தலைமுறையினர், பிரான்ஸ் தேசிய அணியை கைப்பற்றுவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார். 

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில், காயத்தால் பாதிக்கப்பட்ட வரன், மென்செஸ்டர் யுனெட்டின் பலம் பொருந்திய தற்ஜாப்பு ஆட்டக்காரர் ஆவார். 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)