Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை

13/05/2025 07:43 PM

டாக்கா, 13 மே (பெர்னாமா) --   வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவாமி லீக் கட்சியின் பதிவை, வங்காளதேச தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் முஹமட் யூனுஸ் அத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவாமி லீக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தடை விதிக்க உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்தாண்டு வங்காளதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் மக்கள் புரட்சியாக மாறியதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு தப்பியோடினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)