பொது

நீதிமன்றம் தீர்ப்பளித்தால் எவராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது - அன்வார்

11/12/2022 10:15 PM

புத்ராஜெயா, 11 டிசம்பர் (பெர்னாமா) -- நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் எவராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்க்கமாகக் கூறினார்.

தேசிய சட்டத் துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் போன்ற அமைப்புகள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதைத் தாம் உறுதிசெய்யவிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

அரசியல் என்பது பலத்தையும் அதிகாரத்தையும் காட்டுவதற்கான தளமல்ல என்பதை ஒவ்வோர் அரசியல்வாதியும் நிரூபிக்க வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.

புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502]