COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டி; நெகிரி செம்பிலான் தோல்வி

19/08/2022 08:32 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் எதிரணியின் இடத்தில் தோல்வியே காணாத நெகிரி செம்பிலான் எஃப்.சி-இன் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் செராஸ் காற்பந்து அரங்கில் வியாழக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் எஃப்.சி 0 - 1 என்ற கோல்களில் கே.எல் சிட்டியிடம் தோல்வி கண்டது.

முதல் பாதியில் இரண்டு அணிகளுமே சரி சமமான நிலையில் விளையாடினாலும் முதல் பாதி முடிவடையும் தருவாயில் கே.எல் சிட்டி ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டது.

அந்த அணியின் கேப்டன் பவுலோ ஜொசூ வெற்றி கோலை அடித்தார்.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தை சமப்படுத்த நெகிரி செம்பிலான் எஃப்.சி கடுமையாக முயன்றாலும் ஆட்டம் 0 -1 என கே.எல் சிட்டிக்கு சாதகமாக முடிவடைந்தது.

கடந்த ஆகஸ்ட் முதல் தேதி 0 -5 என ஜோகூர் டாரூல் தாசிம், JDT-யிடம் படுதோல்வி அடைந்த கே.எல் சிட்டிக்கு இந்த வெற்றி ஆறுதலைக் கொடுத்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]