COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

சோம்பலற்ற சவால்களை ஏற்கும் மலேசிய குடும்பத்தை உருவாக்க அரசாங்கம் உறுதி

19/08/2022 07:10 PM

ஷா ஆலாம், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நிதி நெருக்கடியையும் வாழ்க்கைச் செலவினத்தையும் எதிர்கொள்ள மலேசிய குடும்பத்திற்கு உதவுவதில், சோம்பலற்ற சவால்களை ஏற்கும் மலேசிய குடும்பத்தை உருவாக்குவதை அரசாங்கம் எப்போதும் உறுதிசெய்யும்.

அதற்காக, நாட்டின் வரலாற்றில், மிகப்பெரிய உதவித்தொகையான 7,730 கோடி ரிங்கிட் உதவித் தொகையை அரசாங்கம் ஒதுக்கிட்டதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

சிலாங்கூர், ஷா ஆலமில் இன்று வெள்ளிக்கிழமை எட்டாவது தொடரான மலேசியக் குடும்ப கண்காட்சி திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் அதனைக் கூறினார்.

வெளிப்படையான பொருளாதாரத்தை அமல்படுத்தும் நாடாக மலேசியா, உலக நிதி நெருக்கடியையும், விலை ஏற்றப் பிரச்சனையையும் முற்றிலும் தவிர்க்க முடியாததை அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும், நாட்டின் நிதி நெருக்கடி விகிதம் 3.4 விழுக்காடாக இருப்பதாகவும், தென்கிழக்காசியாவிலேயே மிக குறைவான விகிதம் அதுவாகும் என்றும் பிரதமர் கூறினார்.

இதனிடையே, கடந்த பிப்ர்வரி 19-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது முதல், இதுவரை வேலை உத்தரவாதத் திட்டத்தின் வழி, நான்கு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டிருப்பதாக  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ளவதில், அரசாங்கம் கடந்த மே முதலாம் தேதி தொடங்கி புதிய குறைந்தபட்ச ஊதியமான 1,500 ரிங்கிட்டை அமல்படுத்தி வருகிறது.

அம்முயற்சி, மலேசிய குடும்பத்தின் வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)