விளையாட்டு

2023-இல் அக்.22 முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடக்கம்

18/08/2022 08:10 PM

ஹொங் சோ, 18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சீனா, ஹொங் சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி (ஏ.பி.ஜே) அடுத்த ஆண்டு அக்டோபர் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஏ.பி.ஜே ஒத்திவைக்கப்படுவதாக அதன் ஏற்பாட்டுக் குழு கடந்த மே மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்துலக பாராலிம்பிக் செயற்குழு ஐ.பி.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இப்புதிய தேதியை அறிவித்திருக்கிறது.

ஆசிய பாராலிம்பிக் செயற்குழு (ஏ.பி.சி), ஹோங் சூ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு ஹம்கொக், சீன தேசிய பாராலிம்பி செயற்குழு மற்றும் இதர தரப்பினருடன் கலந்துரையாடிய பிறகே இப்புதிய தேதி முடிவு செய்யப்பட்டதாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவுபெற்ற அடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு புதிய தேதி ஒப்புக்கொள்ளப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் புதிய தேதியை ஆசிய ஒலிம்பிக் மன்றம் ஓ.சி, ஏ அறிவித்தது.

முதலில் அப்போட்டி, இவ்வாண்டு அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளையில், பின்னர், 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் வரையில் தேதி மாற்றம் கண்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு குவாங் சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, சீனா இரண்டாவது முறையாக ஏ.பி.ஜி-ஐ நடத்துவதில் உபசரணை நாடாக விளங்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)