விளையாட்டு

மலேசிய கராத்தே குழு இன்று இரு தங்கம் வென்றது

18/05/2022 09:39 PM

ஹனோய், 18 மே (பெர்னாமா) --  வியட்நாம் சீ விளையாட்டு போட்டியில், மலேசிய கராத்தே குழு இன்று இரு தங்கம் வென்றுள்ளது. இது நாட்டிற்கான 25 மற்றும் 26 வது தங்கப் பதக்கங்களாகும். 

இன்று தொடங்கிய தற்காப்புக் கலைப் போட்டியில், தேசிய குழு 4 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.

பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில்,  சி.ஷாமலாராணி  முதல் தங்கம் வென்றார். 

அவருடன் போட்டியிட்ட தாய்லாந்து வீராங்கனை காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து வெற்றி மலேசியாவுக்கு சாதகமானது. 

இதனை அடுத்து, 26-வது தங்கம் எச். சூரிய சங்கருக்கு கிடைத்துள்ளது. 

அவர் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில், இந்தோனேசியாவின் தெபிங் ஹுதபியாவை வென்று தங்கம் வென்றார். 

இதனிடையே, ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில், எஸ். பிரேம்குமார் மற்றும் 61 கிலோ பெண்கள் பிரிவில், மதிவாணி வெண்கல பதக்கத்தையும் வென்றனர். 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)