பொது

மலாக்கா தேர்தல்; கடுமையான எஸ்.ஓ.பி தேவை - அன்வார்

27/10/2021 06:54 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா)-- மலாக்கா மாநில தேர்தலின்போது அமல்படுத்தவிருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறையான எஸ்ஓபி-ஐ நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் கேந்திரங்கள் பின்பற்ற வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரும் கெஅடிலான் கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டிருக்கிறார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கடுமையான எஸ்.ஓ.பி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

புதன்கிழமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் 2022-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.

மலாக்கா மாநில தேர்தலின்போது, எஸ்.ஓ.பி-ஐ திறம்பட செயல்படுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்றாலும் நம்பிக்கைக் கூட்டணி தமது கடமையைச் சிறப்பாக ஆற்றுவதற்கு முற்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)