பொது

சுகாதார முறையை வலுப்படுத்தும் முயற்சி வரவு - செலவு திட்டத்தில் தொடரும்

27/10/2021 06:53 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயின் புதிய அலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள, நாட்டின் சுகாதார முறை தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சுகாதார முறையை வலுப்படுத்தும் முயற்சிகளை 2022-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடரும்.

மேலும், மக்களின் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரத்தின் மீட்சி, வருமானம், வியாபாரம், நாட்டின் நிலைத்தன்மையை மேம்படுத்துவது, நோய்த் தொற்றுக்கு பிந்தைய நிலையான மறுசீரமைப்பை மேற்கொள்வது ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இன்று, புதன்கிழமை கோலாலம்பூரில், 2022-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மொத்தமக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளாமல், கவனமுடனும் தொடர்ந்து செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)