பொது

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 4,422 பிள்ளைகள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்திருக்கின்றனர்

20/09/2021 05:06 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 4,422 பிள்ளைகள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்திருக்கின்றனர். அவர்களில் 154 பேர் ஆதரவின்றி இருக்கின்றனர்.

இந்த பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஆதரவையும் உதவிகளையும் வழங்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரீனா ஹருன் தெரிவித்திருக்கிறார்.

''உதவிகள் தேவைப்படும் அனைத்து சிறுவர்களுக்கும், நாங்கள் நிர்ணயித்திருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும். சிறுவர்களுக்கான உதவித் திட்டம். அதைத் தவிர்த்து, ஆலோசனைகள் மற்றும் இதர உதவிகளும் சிறுவர்களுக்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்,'' என்று அவர் கூறினார்.

ஆதரவின்றி இருக்கும் பிள்ளைகளுக்கு உறவினரோ அல்லது வாரிசோ இல்லையென்றால் அவர்களை சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் மையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதற்கு 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், செக்‌ஷன் 17-லின் கீழ் அனுமதி அளிப்பதாகவும் ரீனா தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)